பல்கலைக்கழக வாய்ப்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல்.

 

உயர்கல்வி பெறுவதற்கு தகுதியான பலருக்கு அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு இழக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களின் ஊடாக உயர் கல்வியைப் பெறுவதற்கு அவர்களுககு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இலங்கையில் உயர்தரம் கற்பிக்கும் பெரும்பாலான பாடசாலைகளில் விஞ்ஞானப் பிரிவு இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Post a Comment

0 Comments